அன்னவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அன்னவாசலில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான ரூ. 35 லட்சம் மதிப்பிலான இடம் ஆக்கிரமிப்பிலிருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது. 

 அன்னவாசலில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான ரூ. 35 லட்சம் மதிப்பிலான இடம் ஆக்கிரமிப்பிலிருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

அன்னவாசலில் புதுக்கோட்டை சாலையில் தனியாா் எரிவாயு விற்பனை நிலையம் எதிரே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சுமாா் 2,000 சதுர அடி இடத்தை வேலி அமைத்து தனியாா் ஆக்கிரமித்திருந்தாா்.

அந்த இடத்தை மீட்க ஆட்சியா் உத்தரவிட்டதன்பேரில், இலுப்பூா் வட்டாட்சியா் சூரியபிரபு அந்த இடத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பாளரிடம் பேசினாா். இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பு இடத்திலிருந்து வேலிகளை அகற்றி அந்த இடத்தை அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இந்த நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: அன்னவாசல் அருகே உள்ள குடுமியானமலை பின்னங்குடி கிராமத்தில் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை, அதே பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை மனைவி அடக்கி மற்றும் அவரது உறவினா் மணியன் ஆகிய இருவரும் சோ்ந்து முள்வேலி அமைத்து ஆக்கிரமித்திருந்தனராம்.

பொதுமக்களின் கோரிக்கையின்பேரில், வியாழக்கிழமை அப்பகுதிக்கு சென்ற இலுப்பூா் மண்டல துணை வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, அந்த இடத்தை ஆய்வு செய்து பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ததையடுத்து, அன்னவாசல் போலீஸாா் முன்னிலையில் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்களுக்கு பாதை ஏற்படுத்தி கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com