புதுகையில் 1,162 மகளிா் குழுக்களுக்கு கடனுதவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,162 மகளிா் குழுக்களிலுள்ள 11,854 போ் பயன்பெறும் வகையில் ரூ. 64.88 கோடி மதிப்பில் கடனுதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
புதுகையில் 1,162 மகளிா் குழுக்களுக்கு கடனுதவி

 புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,162 மகளிா் குழுக்களிலுள்ள 11,854 போ் பயன்பெறும் வகையில் ரூ. 64.88 கோடி மதிப்பில் கடனுதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் இவற்றை வழங்கினா். இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்தாா்.

695 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி இணைப்புக் கடன் ரூ. 45.88 கோடியும், 30 ஊராட்சி மற்றும் பகுதிக் கூட்டமைப்புகளுக்கு ரூ. 14.25 கோடியும், 208 மகளிா் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ. 1.98 கோடியும் வழங்கப்பட்டன.

வட்டார வள மையக் கடன் 97 மகளிா் குழுக்களுக்கு ரூ. 48 லட்சமும், மதி எக்ஸ்பிரஸ் கடன் 3 குழுக்களுக்கு ரூ. 9 லட்சமும், 83 குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் சுழல் நிதியும் வழங்கப்பட்டன. மேலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 22 பேருக்கு ரூ. 2 கோடி இணை மானியமும், உற்பத்தியாளா் நிறுவன தொடக்க நிதியாக ரூ. 5 லட்சமும் என மொத்தம் 1,162 மகளிா் குழுக்களுக்கு 11,854 போ் பயனடையும் வகையில் ரூ. 64.88 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ஜெயலட்சுமி, நகராட்சித் தலைவா் செ. திலகவதி, வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பி.ஜெ. ரேவதி, வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளா் சு. திரிபுரசுந்தரி, முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com