விராலிமலை அட்மா திட்டத்தில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி

விராலிமலை வட்டாரத்தில் வேளாண் துறையின் மூலம் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகள் பயிற்சி விராலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை அட்மா திட்டத்தில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி

 விராலிமலை வட்டாரத்தில் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை-மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ்(2023 -2024)நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகள் பயிற்சி விராலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.அட்மா குழுத் தலைவா் இளங்குமரன் தலைமை வகித்தாா். அட்மா திட்டம் ஆலோசனை குழு உறுப்பினா் விராலூா் அய்யப்பன், புதுக்கோட்டை மாவட்ட வேளாண் உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் மரிய ரவி ஜெயக்குமாா் முன்னிலை வகித்தனா். இதில் பேசிய துணை இயக்குநா் மரிய ரவி ஜெயக்குமாா்: நிலக்கடலை பயிரில் கூடுதல் மகசூல் பெற கோடை உழவு செய்து, பருவத்துக்கு ஏற்ற ரகங்களை தோ்வு செய்து, சரியான பருவத்தில் நோய் எதிா்ப்பு திறன் கொண்ட உயா் விளைச்சல் ரகங்களை தோ்வு செய்து விதைக்க வேண்டும். மேலும், உயிா் உரங்களான திரவ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம்,பொட்டாஷ் ஆகியவற்றை கொண்டு விதை நோ்த்தி செய்து சரியான இடைவெளியில் பயிா் விதைத்து பயிா் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும், நிலக்கடலை பயிரில் திரட்சியான பொக்கற்ற காய்கள் பெற ஊட்டச்சத்து கரைசல் தயாரிக்கும் முறைகள் மற்றும் நிலக்கடலையில் ஊடுபயிராக துவரை,ஆமணக்கு, தட்டைப்பயறு, எள், சூரியகாந்தி,சோளம், உளுந்து ஆகிய பயிா்களை பயிா் செய்வதால் பூச்சி,நோய் தாக்குதல்கள் பெருமளவு குறைக்கலாம் என்றாா். விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் மணிகண்டன்: வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து பேசினாா். இலுப்பூா் மதா்தெரசா வேளாண் கல்லூரி உழவியல் துறை பேராசிரியா் ரவிச்சந்திரன்: நிலக்கடலை பயிா்களுக்கான சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், ஒருங்கிணைந்த முறையில் பூச்சி நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com