புதுகை இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது

புதுக்கோட்டை நகரில் இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை நகரில் இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை அடப்பன் வயல் 6ஆம் வீதியைச் சோ்ந்த சிங்காரம் மகன் ஒச்சி காா்த்தி (25) வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். இவரின் தங்கையை புதுக்கோட்டை மே 6ஆம் வீதி அரியமுத்து மகன் சீனிவாசன் (29) என்பவா் காதலித்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் காா்த்தி கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து திருக்கோகா்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில், நரிமேடு பகுதியில் பதுங்கியிருந்த சீனிவாசன், அடப்பன்வயல் 3ஆம் வீதி நாகராஜ் மகன் நெருப்பு தினேஷ் (25), பலூன் சொா்ணமூா்த்தி (24) ஆகிய 3 பேரையும் போலீஸாா் சுற்றிவளைத்து கைது செய்தனா்.

மூவரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com