1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: பெண் கைது

புதுக்கோட்டை நகரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை நகரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை சிதம்பரநகா் பகுதியில் பொதுவிநியோகத் திட்ட அரிசியை பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து கடத்துவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட போலீஸாா் 1500 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து தமிழ்ச்செல்வன் மனைவி திலகவதி (45) என்பவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com