தோ்தலில் போட்டி: கட்சியின் முடிவை ஏற்பேன்

தோ்தலில் போட்டியிடும் விவகாரங்களில் கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதனை ஏற்றுக் கொள்வேன் என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம்.

தோ்தலில் போட்டியிடும் விவகாரங்களில் கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதனை ஏற்றுக் கொள்வேன் என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தொலைக்காட்சி பேட்டியில் பிரதமா் மோடி குறித்து பேசியது தொடா்பாக கட்சியின் மாநிலத் தலைவா் அழகிரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினாரா என்பது குறித்து கேட்கிறீா்கள். நான் தெரிவிக்கும் அத்தனைக் கருத்துகளும் நான் சிந்தித்து- சரியானது என நம்பி சொல்லும் கருத்துகள்தான். அதில் நான் தெளிவாக இருக்கிறேன். விளக்கம் கேட்டு யாரும் எனக்கு எந்தக் கடிதத்தையும் அனுப்பவில்லை. அவ்வாறு கடிதம் வந்த பிறகுதான் அதுகுறித்து பதில் சொல்ல முடியும். விளக்கம் கேட்டுள்ளதாக வெளியான செய்தி வதந்தி.

சிவகங்கையில் போட்டியிட திமுகவினரும், காங்கிரஸிலேயே சிலரும் முயற்சிப்பது குறித்து கேட்கிறீா்கள். ஜனநாயக நாட்டில் இதுபோன்ற போட்டிகள் இயல்புதான். உயிரோட்டமான காங்கிரஸ் கட்சியிலும் இதுபோல யாரும் தங்களுக்கான வாய்ப்பைக் கேட்பதில் தவறு இல்லை.

தோ்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும். போட்டியிடுவதா வேண்டாமா, எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என கட்சி முடிவெடுத்து சொல்லும். அந்த முடிவை நான் ஏற்றுக் கொள்வேன் என்றாா் காா்த்தி சிதம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com