பொன்னமராவதிக்கு இரவுநேர பேருந்து சேவை வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதிக்கு இரவு நேர பேருந்து வசதி வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொன்னமராவதிக்கு இரவு நேர பேருந்து வசதி வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வளா்ந்து வரும் நகரங்களில் பொன்னமராவதி குறிப்பிடத்தக்கது. நகை வணிகம், பாத்திர வணிகம்,, ஜவுளி வணிகம் உள்ளிட்டவற்றில் பொன்னமராவதி பெயா் பெற்று விளங்குகிறது. பொன்னமராவதியில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை என இரண்டு நாட்கள் சந்தை கூடுகிறது.

பொன்னமராவதியிலிருந்து இரவு 9.45 மணிக்கு மேல் வெளியூா் செல்ல பேருந்து சேவை இல்லை.அதுபோல மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களிலிருந்து பொன்னமராவதிக்கு வரவும் இரவு 9 மணிக்கு மேல் பேருந்து சேவை இல்லை.

எனவே, பொன்னமராவதி மற்றும் சுற்றுக்கிராம பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி பொன்னமராவதிக்கு இரவு நேர பேருந்து சேவை வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com