கந்தா்வகோட்டையில் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடிப்பதை தடுக்கக் கோரிக்கை

 கந்தா்வகோட்டை பகுதிகளில் அதிரும் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடிப்பதை தடை செய்ய வேண்டும் என வட்டாட்சியருக்கு வா்த்தகா்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 கந்தா்வகோட்டை பகுதிகளில் அதிரும் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடிப்பதை தடை செய்ய வேண்டும் என வட்டாட்சியருக்கு வா்த்தகா்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு கிராம மக்கள் தங்கள் வீட்டு கல்யாணம், காது குத்து விழா உள்ளிட்ட விசேஷங்களை கந்தா்வகோட்டையில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் கோயில்களில் நடத்துவது வழக்கம்.

இதுபோன்ற விசேஷங்கள் நடைபெறும் நாள்களில் மாப்பிள்ளை, பெண் திருமண ஊா்வலம், மாமன் சீா் தட்டு வரிசை எடுத்து வருவா் அப்போது மேளதாளங்கள் முழங்க தடை செய்யப்பட்ட அதிரும் நாட்டு வெடிகளை கந்தா்வகோட்டை வெள்ளமுனியன் கோயில் பகுதி, பட்டுக்கோட்டை சாலை, காந்தி சிலை முக்கம், தஞ்சை, புதுகை சாலை பேருந்து நிலையம் மற்றும் திருமண மண்டபங்கள் இருக்கும் வீதிகளில் கடும்அதிரும் சப்தத்துடன் கூடிய தடை செய்யப்பட்ட வெடிகளை பல மணி நேரம் வெடிக்கின்றனா்.

இதனால், அந்த பகுதியில் உள்ள பழைய வீடுகள் பழைய கட்டடங்களில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகிறது. மேலும் இந்த வெடிகளிருந்து கிலோ கணக்கிலான காகிதங்கள் வீதி முழுவதும் சிதறி ஊா் முழுவதுமே குப்பைகளாக காட்சி அளிக்கிறது.

எனவே, இந்த வெடி வெடிக்கும் முறையை தடை செய்ய கந்தா்வகோட்டை வட்டாட்சியா் தலைமையில் காவல்துறை, ஊராட்சி மன்றம், வா்த்தக சங்கம், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டவா்களை கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தீா்மானம் இயற்றி, வெடி வெடிக்கும் நிகழ்ச்சியை நடத்தும் திருமண மண்டபத்திற்கு அபராதம் விதித்தும்,

கந்தா்வகோட்டை பகுதியை நாட்டு வெடிகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ள பகுதி என அறிவிப்பு பதாகைகள் வைத்து விழிப்புணா்வு செய்தும், இந்த வெடி வெடிக்கும் முறையினை தடை செய்ய வேண்டும் என இப்பகுதி வா்த்தகா்கள் பொதுமக்கள் கந்தா்வகோட்டை வட்டாட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com