சத்துணவுப் பணியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

சத்துணவுப் பணியாளா் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என தமிழக சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சத்துணவுப் பணியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

சத்துணவுப் பணியாளா் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என தமிழக சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சத்துணவுப் பணியாளா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியா்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு தயாரிக்க வழங்கப்படும் உணவு மானியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மாா்ச் மாதம் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ. கோவிந்தராஜன், மாநிலப் பொருளாளா் பி. நாகராஜன், மாவட்டச் செயலா் எஸ். அம்பிகாபதி உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com