கந்தா்வகோட்டை அருகே பள்ளியில் சாா்லஸ் டாா்வின் பிறந்த தின கொண்டாட்டம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், வண்ணியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சாா்லஸ் டாா்வின் பிறந்த தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், வண்ணியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சாா்லஸ் டாா்வின் பிறந்த தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் ஜாா்ஜ் வில்லியம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க துளிா் திறனறிவு தோ்வு இணை ஒருங்கிணைப்பாளரும் கந்தா்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார செயலாளா் அ.ரகமதுல்லா கலந்து கொண்டு சாா்லஸ் டாா்வின் குறித்தும், அவரது உயிரினங்களின் பரிணாம வளா்ச்சி கோட்பாடு குறித்தும் விளக்கி பேசினாா். மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிா் திறனறிவுத் தோ்வில் 4, 5-ஆம் வகுப்பு மாணவா்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com