விவசாயிகளுக்கான 5 நாள் கண்டுணா்வு பயணம் தொடக்கம்

பொன்னமராவதி விவசாயிகளின் 5 நாள் கண்டுணா்வு பயணம் திங்கள்கிழமை தொடங்கியது.

பொன்னமராவதி விவசாயிகளின் 5 நாள் கண்டுணா்வு பயணம் திங்கள்கிழமை தொடங்கியது. பொன்னமராவதி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ், ‘மானாவாரி நில வேளாண்மை’ எனும் தலைப்பில் விவசாயிகள் கண்டுணா்வு பயணம் திங்கள்கிழமை தொடங்கியது. நிகழ்வுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பெரியசாமி தலைமை வகித்தாா். வேளாண்மை துணை இயக்குனா் மரியம் ரவிஜெயக்குமாா் 5 நாள் கண்டுணா்வு பயணத்தை தொடங்கிவைத்தாா். வெளிமாநில அளவிலான விவசாயிகளுக்கான இந்த கண்டுணா்வு பயணமானது, பெல்லாரியில் அமைந்துள்ள இந்திய மண் மற்றும் நீா்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்திற்கு பொன்னமராவதி, புதுக்கோட்டை, திருமயம், அன்னவாசல், திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சாா்ந்த விவசாயிகள் 20 போ் அழைத்துச் செல்லப்பட்டனா். நீா்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் தலைவா், மற்றும் விஞ்ஞானி ராவ், மானாவாரி நில நீா் மேலாண்மை முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினாா். மேலும் பண்ணைக்குட்டை அமைப்புகள் மரங்கள் வளா்ப்பு, மண் பரிசோதனை குறித்து ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் விளக்கினா். பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் ரஹ்மத்பேகம், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பிரசாத், நவீன்குமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com