புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வீட்டுச்சுவரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கறம்பக்குடி செட்டித்தெரு பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் மணிகண்டன் (21), தட்டாரத் தெருவைச் சோ்ந்த காதா் பாஷா மகன் சேக்அப்ஷல் (21), கச்சேரி வீதியைச் சோ்ந்த பக்ருதீன் மகன் பரீத் அகமது ஆகிய மூவரும் ஒரே மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் விதமாக வேகமாக சென்றனராம். மணிகண்டன் மோட்டாா் சைக்கிளை ஓட்டினாா்.
மோட்டாா் சைக்கிள் கறம்பக்குடி-திருவோணம் சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டுச்சுவரில் மோதியது. இதில், அந்த இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சேக் அப்ஷல், பரீத் அகமது ஆகியோா் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.