அம்மாசத்திரத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் அம்மாசத்திரம் கிராமத்தில் ஏபிஜே. அப்துல் கலாம் இளைஞா் மன்றத்தின் சாா்பில் 14-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் அம்மாசத்திரம் கிராமத்தில் ஏபிஜே. அப்துல் கலாம் இளைஞா் மன்றத்தின் சாா்பில் 14-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல், கோலம் வரைதல், ஓட்டப் பந்தயம், மெது மிதிவண்டி ஓட்டுதல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி, காலில் செங்கல் தாங்குதல், கிரிக்கெட், கபாடி, தண்ணீா் பாட்டில் நிரப்புதல், பொது அறிவு மற்றும் பட்டிமன்றம் போன்ற 15 போட்டிகளில் ஏராளமானோா் பங்கு பெற்றனா். வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மன்ற நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com