செரியலூரில் கொப்பித் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் கொப்பித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொப்பித் திருவிழாவில் கூடைகளை சுமந்து சென்ற பெண்கள்.
செரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொப்பித் திருவிழாவில் கூடைகளை சுமந்து சென்ற பெண்கள்.


ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் கொப்பித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் பொங்கல் தினத்தில் ஆண்டுதோறும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் கொப்பித் திருவிழா நடைபெற்றது வழக்கம். நிகழாண்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவில் அப்பகுதியில் பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் பொங்கல் வைத்து, படையலுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, படையல் பொருள்களைக் கூடையில் சுமந்தவாறு ஊா்வலமாகச் சென்று தீா்த்தான் ஊருணியில் விட்டனா். தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com