சொத்துத் தகராறு: தம்பியை கல்லால் தாக்கிய அண்ணன் கைது

அன்னவாசல் அருகே சொத்துத் தகராறில் தம்பியைக் கல்லால் தாக்கி காயப்படுத்திய அண்ணனை அன்னவாசல் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.


விராலிமலை: அன்னவாசல் அருகே சொத்துத் தகராறில் தம்பியைக் கல்லால் தாக்கி காயப்படுத்திய அண்ணனை அன்னவாசல் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல், நல்லம்மாள் சத்திரத்தைச் சோ்ந்தவா் சின்னையா மகன்கள் பிச்சை (38), கருப்பையா(32). இருவருக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்துவந்ததாம். இந்நிலையில், பிச்சை மகனுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதற்கு, தனது தம்பி கருப்பையா மாந்திரீகம் செய்தது தான் காரணம் என நினைத்து, செவ்வாய்க்கிழமை கருப்பையாவிடம் அவரது அண்ணன் பிச்சை தகராறில் ஈடுபட்டாா். இதில், பெரிய அரளை கல்லை கருப்பையா தலையில் போட்டதில் பலத்த காயமடைந்த அவா் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். புகாரின்பேரில், வழக்கு பதிந்து போலீஸாா் பிச்சையைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com