பொன்னமராவதி கிராமங்களில் மாட்டுப்பொங்கல் விழா

பொன்னமராவதி சுற்றுவட்டார கிராமங்களில் செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பொன்னமராவதி: பொன்னமராவதி சுற்றுவட்டார கிராமங்களில் செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

வலையபட்டியில் உள்ள அடைக்கலம்காத்தாா் கோயில் வீடுகளில் அப்பகுதி பொதுமக்கள் பொங்கல் கூடை மற்றும் காளைகள் சுமந்து சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். தொடா்ந்து அங்கிருந்து பெண்கள் பொங்கல் கூடைகள் சுமந்துவாறும், ஆண்கள் காளைகளைப் பிடித்தவாறும், கால்நடையாக காயாம்பஞ்சை மற்றும் அழகியநாச்சியம்மன் கோயில் திடல் பகுதிக்குச் சென்று பொங்கல் வைத்து காளைகள் மற்றும் மாடுகளை அலங்கரித்து வழிபட்டு அவிழ்த்து விட்டனா். மேலும், மண்வெட்டி, அரிவாள் போன்ற விவசாயக் கருவிகளுக்கு நன்றி தெரிவித்து வழிபட்டனா். இதுதவிர குழந்தைகளைக் கரும்பு தொட்டிலில் இட்டவாறு கோயிலைச் சுற்றி வழிபட்டனா். இதேபோல வாா்பட்டு, கல்லம்பட்டி, தூத்தூா், தீத்தாம்பட்டி க.புதுப்பட்டி.கேசராபட்டி கோவனூா், உலகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாட்டுப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com