நிலக்கடலையில் பயிா் மேலாண்மைப் பயிற்சி

கந்தா்வகோட்டை, ஜன.19: கந்தா்வகோட்டை வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டத்தின் கீழ் நொடியூா் கிராமத்தில் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை

நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநா் அன்பரசன் தலைமை வகித்தாா். உதவி வேளாண்மை அலுவலா் ரெகுநாதன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜீவ், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சங்கீதா, சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) ஆதிசாமி பயிற்சியளித்தாா். முன்னதாக உதவி வேளாண்மை அலுவலா் ரெகுநாதன் நிலக்கடலையில் சாகுபடிவிவரங்கள், மானியங்கள் குறித்து விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com