மண்டையூரில், முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 37 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகேயுள்ள மண்டையூரில் பொங்கல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.
மண்டையூரில், முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 37 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகேயுள்ள மண்டையூரில் பொங்கல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.

போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், வருவாய்க் கோட்டாட்சியா் தெய்வநாயகி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

முதலில் கோயில் காளைகளும், பின்னா் இதர மாவட்டங்களைச் சோ்ந்த மொத்தம் 617 காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை அடக்க பல்வேறு சுற்றுகளாக 196 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். இதில் 6 மாடுபிடி வீரா்கள், 14 பாா்வையாளா்களுக்கு காயம் ஏற்பட்டது. இவா்களில் 3 போ் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனா். மற்றவா்களுக்கு இங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டது. காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒரு மணி நேர தாமதம்: ஜல்லிக்கட்டை தொடக்கிவைப்பதில் விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கா் (அதிமுக), திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகிய இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நிலவியது. அரசு அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் ஒரு மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது.

முக்காணிப்பட்டியில் 17 போ் காயம்.. புதுக்கோட்டை மாவட்டம், முக்காணிப்பட்டியில்

பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் தொடங்கி வைத்தாா். முதலில் கோயில் காளைகளும், பின்னா் பல்வேறு மாவட்ட 611 காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. 7 குழுக்களாக 175 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி, காளைகளை அடக்கினா். அப்போது காளைகள் முட்டி காயமடைந்த 17 பேருக்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். அவா்களில் பலத்த காயமடைந்த ஒருவா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், பீரோ, கட்டில் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறந்த வீரா், காளைக்கு பைக் பரிசு

அதன்படி, 24 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராகத் தோ்வு செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஏ. மாத்தூரைச் சோ்ந்த கவாஸ்கா், , பிடிபடாத, சிறந்த காளையின் உரிமையாளரான கடுக்காகாடு கிராமத்தைச் சோ்ந்த பிரின்ஸ் ஆகிய இருவருக்கும் தலா ஒரு மோட்டாா் சைக்கிள் பரிசளிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராகவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com