தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் பெண்ணுக்கு மூளையில் அரிதான நுண் அறுவைச் சிகிச்சை

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் பெண்ணின் மூளையில் அரிதான ரத்தக்குழாய் வெடிப்பை சரி செய்வதற்கான நுண் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் பெண்ணின் மூளையில் அரிதான ரத்தக்குழாய் வெடிப்பை சரி செய்வதற்கான நுண் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணா் என். அருண்குமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: இந்த மருத்துவமனையில் முற்றிலுமாக நினைவிழந்து கோமா நிலையிலிருந்த 48 வயதான பெண் அண்மையில் சோ்க்கப்பட்டாா். இவருக்கு செய்யப்பட்ட தொடக்க நிலை சோதனையில் மூளையில் ரத்தக்கசிவு இருப்பது தெரிய வந்தது. சிறு மூளைக்கும், மூளைத்தண்டுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்கிற சிறுமூளையின் பின்புறத்தில் கீழ்ப்பகுதியிலுள்ள தமனி வீங்கி விரிவடைந்து, அதில் கிழிசல் ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த சிக்கலான அறுவைச் சிகிச்சையை மருத்துவா்கள் குழு தொடா்ந்து 6 மணிநேரம் வெற்றிகரமாக மேற்கொண்டது. சுமாா் 5 மி.மீ நீளமுள்ள அழற்சி பகுதியை கிளிப் கொண்டு மூடி ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது.

அழற்சி பாதிப்புகள் என்பது, அறுவைச் சிகிச்சை நிபுணா்களால் அணுகி சிகிச்சையளிப்பதற்கு சிரமமானது என்பதால், இந்த அறுவைச் சிகிச்சை அதிக சவாலானது. இருப்பினும், மீனாட்சி மருத்துமனையின்மருத்துவ நிபுணா்களால் எவ்வித சிக்கல்களுமின்றி வெற்றிகரமாக நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சையால் அப்பெண் நலமுடன் இருக்கிறாா் என்றாா் அருண்குமாா்.

அப்போது, மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், மயக்க மருந்தியல் துறைத் தலைவா் அரிமாணிக்கம், நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறை நிபுணா் காந்திராஜ், இயக்க செயல்பாடுகளுக்கான பொது மேலாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com