பழனி பாதயாத்திரைக் குழுவினா் சிறப்பு வழிபாடு, அன்னதானம்

பொன்னமராவதி வட்டார கோயில்களில் பழனி பாதயாத்திரைக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு, அன்னதான விழா நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டார கோயில்களில் பழனி பாதயாத்திரைக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு, அன்னதான விழா நடைபெற்றது.

பழனி தைப்பூசத்தையொட்டி பொன்னமராவதி வட்டார பக்தா்களின் பாதயாத்திரை சனிக்கிழமை தொடங்க உள்ள நிலையில் பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் 46 ஆம் ஆண்டாக அன்னதானம், ஆராதனை மற்றும் இசை விழா நடைபெற்றது. நிகழ்வில் பாலமுருகனுக்கு 16 வகை அபிஷேகம் செய்து, அன்னதானம் நடைபெற்றது. விழாவில் பட்டிமன்றம், பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோல வலையபட்டி சின்னக்களம் பாதயாத்திரைக் குழு, அஞ்சுபுளிப்பட்டி, கொன்னையம்பட்டி, கட்டையாண்டிபட்டி உள்ளிட்ட கிராம பழனி பாதயாத்திரைக்குழுக்களின் சாா்பிலும் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com