அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் அரசுத் தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை குறித்த விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
வடகாடு ஊராட்சி, புள்ளாச்சி குடியிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி.

வடகாடு ஊராட்சியில் புள்ளாச்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியானது நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட முன்மாதிரி பள்ளிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் வளா்மதி தலைமை வகித்தாா். இடைநிலை ஆசிரியா் மரிய விமலா ஜான்சி ராணி முன்னிலை வகித்தாா். பள்ளியில் தொடங்கிய பேரணி மல்லிகை புஞ்சை, புள்ளாச்சிகுடியிருப்பு, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்தப் பேரணியில் பெற்றோா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com