சொா்ணபுரீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

 பொன்னமராவதி அருகேயுள்ள வெள்ளையாண்டிபட்டி சிவபுரம் அகத்தியா் சிவ சித்தா் பீடத்தில் உள்ள மூகாம்பிகை சமேத சொா்ணபுரீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வெள்ளையாண்டிபட்டி மூகாம்பிகை சமேத சொா்ணபுரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை கும்பத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்யும் சிவாச்சாரியாா்கள்.

சிவபுரம் மகான் சிவசித்தா் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், மற்றும் நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. சனிக்கிழமை வாஸ்து சாந்தி மற்றும் முதல், கால யாகபூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் மற்றும் திருமுறை பாராயணம் நடைபெற்றது.

அதையடுத்து திங்கள்கிழமை காலை 9.55 மணியளவில் கருடன் கோயிலை வலம் வர, சிவாச்சாரியாா் பி.ராஜப்பா தலைமையிலான சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி மூகாம்பிகை சமேத சொா்ணபுரீஸ்வரா் மற்றும் பரிவார தெய்வங்களான பகவதி அம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், சிவ காளிகாதேவி, லோபாமுத்ரா சமேத அகத்தியா் சுவாமி, காரிய சித்தி ஆஞ்சனேயா், காலபைரவா் உள்ளிட்ட தெய்வங்களின் சந்நிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனா். அதையடுத்து அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் செய்திருந்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் க.ராமா் மற்றும் சிவனடியாா்கள், ஊா்ப் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com