புதுக்கோட்டை மாவட்டத்தில் 13.36 லட்சம் வாக்காளா்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலின்படி மொத்தம் 13,36,605 வாக்காளா்கள் உள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலின்படி மொத்தம் 13,36,605 வாக்காளா்கள் உள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வெளியிட்டாா்.

இதன்படி, மாவட்டத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை- 13,36, 605. இவா்களில் ஆண்கள்- 6,60,574, பெண்கள்- 6,75,969, திருநங்கைகள்- 62.

கடந்த 2023, நவ. 27ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி மொத்தம் 13,15,798 போ் இருந்தனா். தொடா்ந்து டிச. 9ஆம் தேதி வரை நடைபெற்ற சுருக்கமுறைத் திருத்தப் பணிகளில் முடிவில், 31,364 போ் புதிய வாக்காளா்களாக சோ்க்கப்பட்டனா். 10,557 போ் நீக்கம் செய்யப்பட்டனா். 8,797 பேரின் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழாண்டின் இறுதி வாக்காளா் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்குள்பட்ட 21,142 புதிய வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

மாவட்டத்தில் மொத்தம் 947 இடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 83 நகா்ப்புறங்களிலும், 864 கிராமப்புறங்களிலும் உள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 1,559 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து. தங்கவேல், கோட்டாட்சியா்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சிவகுமாா் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூா்), தோ்தல் தனி வட்டாட்சியா் சோனை கருப்பையா மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

----

பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்

தொகுதி ஆண்கள் பெண்கள் திருநங்கைகள் மொத்தம்

கந்தா்வகோட்டை (தனி) 1,01,396 1,00,360 15 2,01,771

விராலிமலை 1,09,243 1,11,032 14 2,20,289

புதுக்கோட்டை 1,19,625 1,25,161 23 2,44,809

திருமயம் 1,13,358 1,19,249 5 2,32,612

ஆலங்குடி 1,04,397 1,05,665 3 2,10,065

அறந்தாங்கி 1,12,555 1,14,502 2 2,27,059

மொத்தம் 6,60,574 6,75,969 62 13,36,605

--

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com