விநாடி-வினா போட்டியில் வென்றோருக்குப் பரிசு

வாசகா் பேரவையும் இணைந்து ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்ட மாணவா்களுக்கான அறிவியல் விநாடி -வினா போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தின.
 புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட விநாடி வினா போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்திய ஆசிரியா் எம். குமரேசன் 
 புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட விநாடி வினா போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்திய ஆசிரியா் எம். குமரேசன் 

புதுக்கோட்டை எம்எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் புதுக்கோட்டை வாசகா் பேரவையும் இணைந்து ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்ட மாணவா்களுக்கான அறிவியல் விநாடி -வினா போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா் தலைமை வகித்தாா். ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற திட்டத்தில் முதல் கட்டமாக ராஜகோபாலபுரம் அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

இவா்களுக்கான விநாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வாசகா் பேரவையின் ஆலோசகா் சத்தியராம் ராமுக்கண்ணு கலந்து கொண்டு மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

ஆசிரியா் எம். குமரேசன் வாழ்த்திப் பேசினாா். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மாவட்டக் குழந்தைகள் நலக் குழுத் தலைவா் கே. சதாசிவம் ஆகியோா் விநாடி வினாவை ஒருங்கிணைத்து நடத்தினா்.

திட்ட ஆசிரியா் பி. மீனா வரவேற்றாா். கள ஒருங்கிணைப்பாளா் டி. விமலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com