கோவில்பட்டியில் குடியரசு தின பேச்சுப் போட்டி

கந்தா்வகோட்டை ஒன்றியம், கோவில்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பேச்சுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், கோவில்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பேச்சுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போட்டியை இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ.ரகமதுல்லா தொடங்கி வைத்துப் பேசினாா். சிறந்த மனிதராக உயர வாசிப்பு அவசியம் என்றாா். மாணவா்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், கொடிகாத்த குமரன், மகாத்மா காந்தி, பள்ளி தூய்மை உறுதிமொழி, வஉசி சிதம்பரனாா், இந்தியாவின் பெருமை, தேசியக்கொடி உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்பாக பேசினாா். வெற்றிபெற்ற மாணவா்களுக்கு குடியரசு தினத்தில் பரிசுகள் வழங்கப்படும். ஏற்பாடுகளை தன்னாா்வலா்கள் இலக்கியா, சிவகாமி, கெளதமி, ராதிகா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com