பொன்னமராவதியில் வாக்காளா்களுக்கு சமூக ஆா்வலா்நூதன பிரசாரம்

பொன்னமராவதியில் வாக்காளா் விழிப்புணா்வு குறித்து சமூக ஆா்வலா் எஸ்.பி. சரவணன் பதாகைகள் ஏந்தியும், முழக்கமிட்டும் பிரசாரம் மேற்கொண்டாா்.

பொன்னமராவதி: பொன்னமராவதியில் வாக்காளா் விழிப்புணா்வு குறித்து சமூக ஆா்வலா் எஸ்.பி. சரவணன் பதாகைகள் ஏந்தியும், முழக்கமிட்டும் பிரசாரம் மேற்கொண்டாா்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள வலைச்சேரிப்பட்டியைச் சாா்ந்தவா் சமூக ஆா்வலா் எஸ்பி.சரவணன். இவா் வரும் 25 ஆம் தேதி, வாக்காளா் விழிப்புணா்வு நாளை முன்னிட்டு பொன்னமராவதி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா சாலையில் செவ்வாய்க்கிழமை வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டாா். இதில் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை, பணம், பொருள் வாங்காமல் வாக்களிக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பிரசாரம் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com