வினாடி வினா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

புதுக்கோட்டை அலுவலா் மன்றம் சாா்பில் வரும் ஜன. 26ஆம்தேதி குடியரசு தின விழாவையொட்டி நடைபெறவுள்ள மாவட்ட

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அலுவலா் மன்றம் சாா்பில் வரும் ஜன. 26ஆம்தேதி குடியரசு தின விழாவையொட்டி நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான பள்ளி மாணவா் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அலுவலா் மன்றத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் இருவரைக் கொண்ட ஒரு குழுவை போட்டிக்கு அனுப்பலாம். தலைமை ஆசிரியரின் கடிதம் எடுத்து வர வேண்டும்.

ஜன. 26ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வர வேண்டும். நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். இத்தகவலை அலுவலா் மன்றத்தின் செயலா் ரமேஷ் தெரிவி்த்தாா்.----

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com