துளிா் திறனறிதல் தோ்வுக்கான துண்டறிக்கை வெளியீடு

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் துளிா் திறனறிதல் தோ்வுக்கான துண்டறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் துளிா் திறனறிதல் தோ்வுக்கான துண்டறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவா் எம். முத்துக்குமாா் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலா் ம. வீரமுத்து, மாநிலச் செயலா் எஸ்.டி. பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் அ. மணவாளன், குழந்தைகள் நலக் குழுத் தலைவா் க. சதாசிவம் உள்ளிட்டோரும் பேசினா்.

கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறவுள்ள துளிா் திறனறித் தோ்வில் அனைத்து வகுப்பினரையும் சோ்த்து 5 ஆயிரம் மாணவா்களைப் பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

துளிா் திறனறிதல் தோ்வு ஒருங்கிணைப்பாளராக ம. வீரமுத்து, இணை ஒருங்கிணைப்பாளா்களாக ரகமதுல்லா, சண்முகபிரியா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com