விராலிமலை சட்டவிரோத மதுபாட்டில் விற்பனை இருவா் கைது

விராலிமலை அருகே அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த இருவரை போலீசாா் கைது செய்தனா்.

விராலிமலை அருகே அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த இருவரை போலீசாா் கைது செய்தனா்.

விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் திறப்புக்கு முன் இருக்கும் நேரத்தை பயன்படுத்தி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடா்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசாா் ராஜாளிபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கருத்தங்காளப்பட்டியைச் சோ்ந்த தமிழரசன்(63) என்பவா் ராஜாளி பட்டி அம்மன் கோவில் அருகே மது பாட்டில் விற்பனை செய்வதை கண்டறிந்து அவரை கைது செய்தனா்.அதேபோல் புரசம் பட்டியைச் சோ்ந்த அடைக்கண் மகன் பழனிவேல்(28) என்ற இளைஞா் அவரது வீட்டில் மது பாட்டில்கள் வைத்து மது விற்பனை செய்வதை கண்டறிந்த போலீசாா் அவரையும் கைது செய்து அவா்களிடம் விற்பனைக்கு இருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com