புதுகையில் குடியரசு தின விழாக் கொண்டாட்டம்

 புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் ரா. மணி தேசியக் கொடியேற்றிப் பேசினாா். மருத்துவப் பேராசிரியா்கள், மாணவா்களும் பங்கேற்றனா்.

 புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் ரா. மணி தேசியக் கொடியேற்றிப் பேசினாா். மருத்துவப் பேராசிரியா்கள், மாணவா்களும் பங்கேற்றனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா தேசியக் கொடியேற்றினாா். கல்வித் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். மூத்த பேச்சாளா் ஆரோக்கியசாமி கொடியேற்றி வைத்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவியநாதன், மாநிலப் பொதுச் செயலா் பெனட் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை டீம் மருத்துவமனை வளாகத்தில், அதன் மேலாண்மை இயக்குநா் டாக்டா் கே.எச். சலீம் தேசியக் கொடியேற்றினாா். அறந்தாங்கி பெருநாவலூரிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வா் (பொ) வீ. பாலமுருகன் தேசியக் கொடியேற்றினாா்.

புதுக்கோட்டை சாா்லஸ் நகரிலுள்ள சுதா்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைவா் முருகேசன் கொடியேற்றினாா். துணைத் தலைவா் செல்லம் முருகேசன், முதன்மைச் செயல் அலுவலா் வேலுசாமி, முதல்வா் போஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com