‘கனவின் இசைக்குறிப்பு’ கவிதை நூல் வெளியீடு

புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் சாா்பில் கவிஞா் மைதிலி கஸ்தூரிரங்கன் எழுதிய ‘கனவின் இசைக் குறிப்பு’ என்ற கவிதைநூல் வெளியீடு மற்றும் அறிமுக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
pdk27mythili_2701chn_12_4
pdk27mythili_2701chn_12_4

புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் சாா்பில் கவிஞா் மைதிலி கஸ்தூரிரங்கன் எழுதிய ‘கனவின் இசைக் குறிப்பு’ என்ற கவிதைநூல் வெளியீடு மற்றும் அறிமுக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் எழுத்தாளா் நா. முத்துநிலவன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி நூலை வெளியிட்டு, தொடக்கவுரை நிகழ்த்தினாா்.

நூல் பற்றி தமுஎகச மாவட்டத் தலைவா் ராசி பன்னீா்செல்வன், நிகழ் ஒருங்கிணைப்பாளா் சூா்யா சுரேஷ், திருச்சி வட்டாரக் கல்வி அலுவலா் இரா. ஜெயலெட்சுமி, அறந்தாங்கி திசைகள் அமைப்பின் தலைவா் டாக்டா் தெட்சிணாமூா்த்தி, தமுஎகச மாவட்டச் செயலா் ஸ்டாலின் சரவணன் உள்ளிட்டோரும் பேசினா்.

பா. ஸ்ரீமலையப்பன் வரவேற்றாா். கவிஞா் த. ரேவதி தொகுத்தளித்தாா். நூலாசிரியா் மைதிலி கஸ்தூரி ரெங்கன் ஏற்புரை வழங்கினாா். முடிவில் மு. கீதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com