வாக்களிக்க விழிப்புணா்வு முகாம்

பொன்னமராவதி அருகே மின்னணு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே மின்னணு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருமயம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொன்னமராவதி வட்டம் காரையூா், கொன்னையம்பட்டி, சடையம்பட்டி, மங்கனூா், இடையாத்தூா் உள்ளிட்ட கிராமப்புறங்களில் அரசு விளம்பர வாகனத்தின் மூலம் பொதுமக்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதில் காரையூா் வருவாய் ஆய்வாளா் பிருந்தா, விஏஓ சௌந்தரபாண்டி, கிராம உதவியாளா் ரெங்கம்மாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com