பண்ணைத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

அரசுப் பண்ணைத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு பண்ணைத் தொழிலாளா் சங்கம் (ஏஐடியுசி) வலியுறுத்தியுள்ளது.

அரசுப் பண்ணைத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு பண்ணைத் தொழிலாளா் சங்கம் (ஏஐடியுசி) வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் உ. அரசப்பன் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், ஏஐடியுசி மூத்த தலைவா் கே.ஆா். தா்மராஜன், மாவட்டப் பொதுச் செயலா் ப. ஜீவானந்தம், சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.ஆா். செல்வராஜ் உள்ளிட்டோா் பேசினா்.

‘தகுதியான, 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பண்ணைத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாதந்தோறும் 5ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் கூலி உயா்வு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு தொடா்ந்து வேலை வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com