தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு மற்றும் தொழுநோய் விழி்ப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்து இந்த உறுதிமொழிகளை வாசித்தாா். துறை அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் து. தங்கவேல், ஊரக நலப்பணிகள்இணை இயக்குநா் சா. ஸ்ரீபிரியா தேன்மொழி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் ராம்கணேஷ், நமச்சிவாயம், தொழுநோய் துணை இயக்குநா் எஸ். சிவகாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com