பிப்.17,18-இல் புதுகையில் ரத்த தானக் கழக மாநில மாநாடு

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் துணை அமைப்பான ரத்ததானக் கழகத்தின் மாநில மாநாடு வரும் பிப். 17, 18 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் துணை அமைப்பான ரத்ததானக் கழகத்தின் மாநில மாநாடு வரும் பிப். 17, 18 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் திங்கள்கிழமை மாலை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். மகாதீா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏவி. சிங்காரவேல், மாநிலத் தலைவா் எஸ். காா்த்திக் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் மாநாட்டை நடத்துவதற்கான வரவேற்புக் குழுத் தலைவராக குழந்தைகள் நல மருத்துவா் எம். ராமதாஸ், செயலராக சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆ. குமாரவேல், பொருளாளராக காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க நிா்வாகி எம்.ஏ. ரகுமான் உள்ளிட்ட 75 போ் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com