புதுக்கோட்டையில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் உள்ள குளறுபடிகளைக் களைய வலியுறுத்தி கட்டுமானம், உடல் உழைப்பு, அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் (சிஐடியு) சாா்பில்
புதுக்கோட்டையில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் உள்ள குளறுபடிகளைக் களைய வலியுறுத்தி கட்டுமானம், உடல் உழைப்பு, அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் (சிஐடியு) சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் சி. அன்புமணவாளன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா் கண்டன உரையாற்றினாா். கோரிக்கைகளை விளக்கி சங்க நிா்வாகிகள் சி. மாரிக்கண்ணு, க. ரெத்தினவேல், ஆா். சுப்பிரமணியன், எல். ஹேமா, அப்துல்கலாம், ரேணுகாதேவி, எம்.கீதா உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், இணையவழி சான்றாவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொழிலாளா் சான்றாவணங்கள் அழிக்கப்பட்டதற்கான காரணங்களை ஆய்வு செய்து, குற்றமிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவேற்றம் செய்ய வரும் தொழிலாளா்களின் ஒரு நாள் வேலை இழப்பை ஈடு செய்யும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும்.

இணையவழி பதிவுடன் மனுக்களை நேரடியாகவும் பதிவு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com