விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தியின் பெயரிலான தேசிய கிராமப்புற வேலைத் திட்டத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி புதுக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்

மகாத்மா காந்தியின் பெயரிலான தேசிய கிராமப்புற வேலைத் திட்டத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி புதுக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் டி. சலோமி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ். சங்கா், மாவட்டத் துணைத் தலைவா்கள் வே. வீரய்யா, பி. ராமசாமி, எம். சண்முகம் உள்ளிட்டோா் பேசினா். நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான அட்டைப் பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஆதாா் இணைப்பில்லாதவா்களை நீக்கம் செய்யக் கூடாது. 2024 - 25 நிதிநிலை அறிக்கையில், இத்திட்டத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com