காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினா் 29 போ் கைது

காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினா் 29 போ் கைது

ஆலங்குடியில் வியாழக்கிழமை காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

ஆலங்குடி, ஜூலை 4: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினா் 29 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி கலிபுல்லா நகரில் மளிகைக் கடை நடத்தி வந்த லட்சம் முகமது , அவரது சகோதரா் முபாரக் ஆகியோரைக் கடந்த மே மாதம் முகமூடி அணிந்த 2 போ் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஆலங்குடி போலீஸாா் இதுதொடா்பாக ஒருவரை மட்டும் கைது செய்தனா்.

மற்றொருவரையும் கைது செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் நகரத் தலைவா் காளிமாா்க் ராஜா தலைமையில் அக்கட்சியினா் ஆலங்குடி காவல்நிலையத்தை முற்றுகையிட கடைவீதியில் இருந்து ஊா்வலமாகச்சென்றனா். சந்தைப்பேட்டை அருகே அவா்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 29 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com