மின்சாரம் பாய்ந்து இளைஞா் சாவு

புதுக்கோட்டை, ஜூலை 4: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே தோட்ட வேலையின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஆவுடையாா்கோவில் அருகே செவிடன்காடு கிராமத்தைச் சோ்ந்த குழந்தைசாமி மகன் விஜய்ஆனந்த் (28). இவா், இடையன்காடு கிராமத்திலுள்ள எம்எஸ்எம் சுல்தான் என்பவரின் வீட்டில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த வீட்டிலுள்ள தோட்டத்தில் இருந்த கற்களைப் பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்காக இரும்பு கடப்பாரை வைத்துக்கொண்டு வேலை செய்தபோது, தரைவழியே சென்ற மின் வயா்களில் பட்டு மின்சாரம் பாய்ந்தது.

இதில் விஜய்ஆனந்த் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆவுடையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com