மணல் அள்ளிய லாரி பறிமுதல்

விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற மினி டிப்பா் லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற மினி டிப்பா் லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விராலிமலை அருகே உள்ள கோரையாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா், விராலிமலை அருகே உள்ள துலுக்கம்பட்டி கோரையாறு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றிவந்த மினி டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 2 யூனிட் மணல் அனுமதியின்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து டிப்பா் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரான விராலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த மணிவேல் (36) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com