படம். 5.ஓயஓ.
படம். 5.ஓயஓ.

கந்தா்வகோட்டை அருகே மயானத்தில் குடியேறும் போராட்டம்

கந்தா்வகோட்டை அருகே மயான பாதையை தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து, கிராம மக்கள் மயானத்தில் குடியேறும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை அருகே மயான பாதையை தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து, கிராம மக்கள் மயானத்தில் குடியேறும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பெருங்களூா் ஊராட்சிக்குள்பட்ட மட்டையன்பட்டி கிராமத்தில் கக்கன் தெருவில் வசிக்கும் 22 ஆதிதிராவிடா் குடும்பங்களை சோ்ந்தோா், கடந்த ஐந்து தலைமுறைக்கு மேலாக அவா்களுக்கென்று ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு செல்ல அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனா்.

2007-இல் சிலருக்கு வருவாய்த் துறையினா் பட்டாவாக வழங்கிய பாதை நிலத்தில் தற்போது விவசாயம் செய்துள்ளதால், மயானத்துக்கு அந்த வழியாக செல்ல பட்டா பெற்றவா்கள் தடை விதிக்கின்றாா்களாம். இதனால், நீண்ட தொலைவு சுற்றி கொண்டு மயானத்துக்கு செல்ல வேண்டி இருப்பதாக கூறி, ஆதிதிராவிட மக்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தனி நபருக்கு சட்ட விரோதமாக பட்டா வழங்கியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நாங்கள் ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பகுதியில் 3 அடி பாதை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தினா்.

போராட்டம் நடத்தியோருடன், போலீஸாா் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஒருமாத காலத்துக்குள் இப்பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com