புதுகை மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளி முதல்வா் ச.ம. மரியபுஷ்பம் உள்ளிட்டோா்.
புதுகை மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளி முதல்வா் ச.ம. மரியபுஷ்பம் உள்ளிட்டோா்.

புதுகை மாவட்ட இலக்கியப் போட்டி -பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

பொன்னமராவதி, ஜூலை10: புதுக்கோட்டையில் தமிழ்வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டிகளில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை உள்ளிட்ட இலக்கியப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை ராணியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பேச்சுப் போட்டியில், பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவி

மாணவி ச.செம்மொழி முதலிடம் பிடித்து, ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றாா். கட்டுரைப் போட்டியில் இப்பள்ளி மாணவி மு. மதுமிதா இரண்டாம் இடம் பெற்று ரூ. 7 ஆயிரம் ரொக்கப் பரிசை பெற்றுள்ளாா்.

இதனால், இந்த மாணவிகள் மாநிலப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா். இலக்கியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் பள்ளி முதல்வா் ச.ம. மரியபுஷ்பம் மாணவிகளை கெளரவித்து பாராட்டினாா். துணை முதல்வா் ஆா். பிரின்ஸ், ஆசிரியா் செ. பாலமுரளி, தமிழாசிரியா்கள் வ. கலைச்செல்வி, கு. சத்யா ஆகியோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com