புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா் சங்கத்தினா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா் சங்கத்தினா்.

புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குடி, ஜூலை 10: புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிட வேண்டும், அங்கன்வாடி ஊழியருக்கு குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் ஊதியமும், உதவியாளா்களுக்கு ரூ.15ஆயிரம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

இதில், சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com