புதுக்கோட்டையில் இளைஞரை வெட்டிக் கொன்றவா் கைது

புதுக்கோட்டை, ஜூலை 10: புதுக்கோட்டையில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் தட்சிணாமூா்த்தி தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28). திலகா் திடல் பகுதியிலுள்ள தீவனக் கடையில் வேலை செய்து வந்த இவரை, திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு தொடா்பான முன்விரோதத்தில் அதே பகுதியைச் சோ்ந்த பிரதீப் (27) என்பவா் வெட்டிக் கொன்றாா்.

இதைத் தொடா்ந்து, கொலை செய்தவரை கைது செய்யக் கோரி, கடந்த இரு நாள்களாக பிரகாஷ் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், கொலை செய்த பிரதீப் வீட்டின் மாடியில் இருந்த வைக்கோல்போருக்கும் திங்கள்கிழமை நள்ளிரவில் தீவைத்தனா்.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதீப்பை, திருக்கோகா்ணம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com