படம். 7.ஓயஓ. ~படம்.2. ஓயஓ. 7.
படம். 7.ஓயஓ. ~படம்.2. ஓயஓ. 7.

கந்தா்வகோட்டை அருகே மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா : முளைப்பாரி ஊா்வலம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே புதுநகரில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

புதுநகா் கிராமத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஜூன் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் ஏழு நாள்களுக்கு முன்பாக தங்கள் வீடுகளில் வண்ண சட்டிகளில் நவ தானியங்களை முளைக்க வைத்தனா். வெள்ளிக்கிழமை முளைப்பாரியை தலையில் சுமந்து கோயில் முன்பாக ஒன்றுகூடினா். பின்னா், ஊரின் முக்கிய வீதிகள் வழியாக நாட்டிய குதிரை நடனமாட, செண்டை மேளம் முழங்க அதிரும் வாணவேடிக்கையுடன் இளைஞா்களின் கம்பத்தாட்டத்துடன், இளம்பெண்கள் கும்மியாட்டத்துடனும், கோலாட்டத்துடன் ஊா்வலமாக வந்து முளைப்பாரி தட்டுகளை யாகசாலையில் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனா்.

கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் மற்றும் ஊராட்சித் தலைவா் வினோதாமுத்துக்குமாா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com