பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டியில் உயிரிழந்த கோயில் காளைக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.
பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டியில் உயிரிழந்த கோயில் காளைக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.

கருப்புக்குடிப்பட்டி கோயில் காளை உயிரிழப்பு பொதுமக்கள் அஞ்சலி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டி கோயில் காளை உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டி கோயில் காளை உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தது. இதையடுத்து, காளையின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் கேபி கருப்பு என்றழைக்கப்படும் கோயில் காளை சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேல் ஊா்ப் பொதுமக்களால் வளா்க்கப்பட்டு வந்தது. இந்தகாளை தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது.

இந்த காளை உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தது. தகவலறிந்து வந்த கிராம மக்கள் காளையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். அதன்பிறகு காளையின் உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஊா் எல்லைப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com