புதுகை மாநகராட்சி அறிவிப்புக்கு எதிராக ஆளுநரை சந்திக்க முடிவு

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, ஆளுநரைச் சந்தித்து மனு அளிப்பது என மாநகராட்சி மக்கள் கூட்டமைப்பினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட இதர தீா்மானங்கள்: புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, ஆளுநரைச் சந்தித்து மனு அளிப்பது. கிராம சபைக் கூட்டங்களில் புதுக்கோட்டையை மாநகராட்சியாக உயா்த்தக் கூடாது என்ற தீா்மானங்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் அளிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடுவது. மேலும், வரும் ஜூலை 2-ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com