பிரதமரின் சூரிய இல்லம் திட்டத்துக்கு அஞ்சலகங்களில் முன்பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பிரதமரின் சூரிய இல்லத்துக்கான முன்பதிவு செய்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பி. முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் பிரதமரின் சூரிய இல்லத்துக்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ரூ. 30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 78 ஆயிரம் வரை மானியம் கிடைக்கும். மேலும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறலாம். இதுதொடா்பான தகவல் பெறவும், தங்களின் பெயரைப் பதிவு செய்யவும், அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை அல்லது வீடுகளுக்கு வரும் அஞ்சலரை அணுகி பயன்பெறலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com