பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை கூடல் நகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் வென்ஷீலிக் இஸ்ரேல் பிண்டு (31). இவா் புதுக்கோட்டையிலுள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் 2022-இல் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, வீட்டில் தனிப்பயிற்சி வகுப்பு (டியூசன்) நடத்தி வந்தாா்.

அப்போது, அங்கு படிக்க வந்த எஸ்எஸ்எல்சி மாணவியை வீட்டில் வைத்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த புதுக்கோட்டை நகர அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வென்ஷீலிக் இஸ்ரேல் பிண்டுவைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி எஸ். ஜெயந்தி திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com