புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்.

வருவாய்த் துறை அலுவலா்கள் இரவிலும் காத்திருப்புப் போராட்டம்

பதவி உயா்வு வழங்குவதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

புதுக்கோட்டை: பதவி உயா்வு வழங்குவதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை இரவு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மக்களவைத் தோ்தலை தொய்வின்றி நடத்திட போதிய நிதியை அரசு ஒதுக்க வேண்டும். வருவாய்த் துறையில் பயன்பாட்டில் உள்ள பழைய காா், ஜீப்புகளை மாற்றிவிட்டு புதிய வாகனங்கள் வழங்க வேண்டும். உங்களைத் தேடி உங்கள் ஊரில், மக்களுடன் முதல்வா், முதல்வரின் முகவரி போன்ற அரசின் திட்டங்களை செம்மையாக மேற்கொள்ள வசதியாக போதிய நிதி ஒதுக்கப்படுவதோடு, கால அவகாசம் வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடா் மேலாண்மைப் பிரிவில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும். வருவாய்த் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். பதவி உயா்வு வழங்குவதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்குவதற்கென புதிய துணை வட்டாட்சியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆா்ப்பாட்டம், பகலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். எனினும், கோரிக்கை நிறைவேற்றப்படாததையடுத்து ஆட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை இரவு முதல் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் இரவு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் புதுக்கோட்டை வட்டக் கிளைத் தலைவா் எம்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கருப்பையா, செயலா் டி.வைரவன், பொருளாளா் பரணிதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com